Categories
மாநில செய்திகள்

பாலியல் வழக்கு… சிறப்பு டிஜிபியை ஆஜர்படுத்த…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

கடந்த பிப்ரவரி மாதம் பெண் டிஎஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் எஸ்பி கண்ணன் ஆகியோர் இருவர்கள் மீதும் சிபிசிஐடி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கடந்த 29ஆம் தேதி இந்த இருவர்கள் மீதும் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை சிபிசிஐடி தாக்கல் செய்தது.

டிசம்பருக்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து வரும் 9ஆம் தேதி முன்னாள் சிறப்பு டிஜிபி தாஸ் மற்றும் எஸ் பி கண்ணன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சிபிசிஐடி போலீசாருக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |