பாலியல் வழக்கில் தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், நீதிபதி ஜெயச்சந்திரன் புலன் விசாரணைக்கு சாட்சி சொல்ல பொதுமக்கள் முன்வருவதில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார்.
குற்ற வழக்குகளில் புலன் விசாரணைக்கு சாட்சி சொல்ல பொதுமக்கள் முன்வருவதில்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் வேதனை தெரிவித்துள்ளார். பொது நலனின் அக்கறை கொண்டுள்ள ஒரு சிலர் மட்டுமே சாட்சி சொல்ல வருவதாகவும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். பாலியல் வழக்கில் தண்டனையை எதிர்த்து பழனி, ஜெயக்குமார், மணி பாரதி, கோபிநாத் செய்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு ஒன்றில் நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
2006 இல் சிறுமிக்கு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேருக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டு சிறை 3 ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது. 4 பேருக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை குறைத்து உத்தரவிட்டார் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன்..