அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி, 5 ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், கொண்டதாக இருக்கும் போது எடுக்கப்பட்ட படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் கூறி நடிகை சாந்தினி போலீசில் புகார் அளித்தார். அதுமட்டுமல்லாமல் மூன்று முறை தன்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்யச் சொன்னதாகவும், அதனால் முன்னாள் அமைச்சர் மணிகண்டனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதனால் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று நேற்று சென்னை ஐகோர்ட்டில் ; மனுத்தாக்கல் செய்திருந்தார். முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த நடிகை சாந்தினி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமீன் வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிகண்டனை வருகின்ற ஜூன் 9ஆம் தேதி கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.