Categories
தேசிய செய்திகள்

பாலியல் வழக்கு…. முன்னாள் எம்எல்ஏவுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை….!!!!

மேகாலயா மாநில தேசிய பழங்குடியினர் விடுதலை கவுன்சில் தலைவரான ஜூலியஸ் டார்பாங் என்பவர் மீது கடந்த 2007 ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி ஒருவர் புகார் அளித்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு மேகாலயா சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எப்எஸ். சங்மா தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில் ஜுலியஸ் டார்பாங்க் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப் படுவதாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |