Categories
தேசிய செய்திகள்

பாலியல் வழக்கு….. வெளிவர முடியாத அளவிற்கு நித்தியானந்தாவிற்கு பிடிவாராண்டு….. நீதிமன்றம் அதிரடி….!!!!

கர்நாடகா பிடதியில் உள்ள தனது ஆசிரமத்தில் பெண் சீடருக்கு நித்தியாந்தா பாலியல் தொல்லை கொடுத்ததாக 2010ஆம் ஆண்டு, அவரது முன்னாள் கார் ஓட்டுநர் லெனின் கருப்பன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு ராம்நகர் 3-வது மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் நித்தியானந்தா சிறையில் அடைக்கப்பட்டு பின் ஜாமினில் வெளியே வந்தார்.

பின்னர் அவர் நாட்டைவிட்டு வெளியேறியதாக கூறப்பட்ட நிலையில் 2020ஆம் ஆண்டு ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் பல முறை கூறியும் ஆஜராகாத அவருக்கு நீதிமன்றம் ஜாமீனில் வெளியே வர முடியாத பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. மேலும் விசாரணையை செப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதற்கு முன்னர் பல்வேறு பாலியல் வழக்குகளில் அவரை கைது செய்ய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டும், அவர் கைது செய்யப்படவில்லை.

Categories

Tech |