நடிகர் அஜித்தின் பழைய படங்களை இந்தியில் டப் செய்து வெளியிட பாலிவுட் தயாரிப்பாளர்கள் சிலர் முடிவு செய்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் அஜித் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருப்பவர். இவர் ஹிந்தியில் கடந்த 2001ஆம் ஆண்டு ‘அசோகா’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து நடிகை ஸ்ரீதேவியின் ‘இங்கிலீஷ் விங்கிலிஷ்’ படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். இதன்மூலம் நடிகர் அஜித்துக்கு பாலிவுட்டில் ரசிகர்கள் உருவானார்கள் . இதனால் அவரது படங்கள் தற்போது இந்தியில் டப் செய்து வெளியிடப்படுகின்றன.
நடிகர் அஜித் நடித்த வேதாளம் ,விவேகம் ஆகிய திரைப்படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டு யூடியூபில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் பாலிவுட் தயாரிப்பாளர்கள் சிலர் அஜித்தின் பழைய படங்களை இந்தியில் டப் செய்து வெளியிட முடிவு செய்துள்ளனர். அந்தவகையில் நடிகர் அஜித் நடித்த வீரம், பில்லா, வரலாறு ,என்னை அறிந்தால் உட்பட பல திரைப்படங்கள் இந்தியில் டப் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.