Categories
சினிமா தமிழ் சினிமா

பாலிவுட்டில் அறிமுகமாகும் அனிருத்… அதுவும் இந்த ரீமேக் படத்தின் மூலமாகவா?…!!!

ஜெர்ஸி படத்தின் இந்தி ரீமேக்கிற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் தனுஷ் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இந்த படத்தில் இவர் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து இவர் விஜய், அஜித், ரஜினி போன்ற பல டாப் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். தற்போது அனிருத் காத்துவாக்குல ரெண்டு காதல், டான், டாக்டர், பீஸ்ட், இந்தியன்-2 போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

Anirudh gets into trouble with the Musicians' Union | Tamil Movie News -  Times of India

இந்நிலையில் அனிருத் விரைவில் பாலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் நானி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான ஜெர்ஸி படத்தின் ஹிந்தி ரீமேக்கிற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜெர்ஸி படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |