Categories
சினிமா தமிழ் சினிமா

பாலிவுட்டில் கால்பதிக்கும் நடிகர் சிம்பு?…. லீக்கான தகவல்…. எதிர்பார்பில் ரசிகர்கள்….!!!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியாகிய “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. இப்போது சிம்பு கிருஷ்ணா இயக்கிவரும் பத்து தல திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகிவரும் இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதனிடையில் பாலிவுட் சினிமாவில் சிம்பு பாடகராக அறிமுகமாகி இருக்கிறார். சத்ராம் ரமானி இயக்கும் “டபுள் எக்ஸ்.எல்.” எனும் திரைப்படத்தில் தாலி… தாலி… என்ற பாடலை சிம்பு பாடி உள்ளார்.

இப்படத்தில் ஹீமா குரோஷி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அத்துடன் மகத் உட்பட பல முன்னணி பிரபலங்கள் நடித்து உள்ளனர். இதன் வாயிலாக பாலிவுட் திரையுலகில் பாடகராக சிம்பு அறிமுகம் ஆகி இருக்கிறார். இதனால் ரசிகர்களும், திரையுலகினரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க வைக்க சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஆகவே விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Categories

Tech |