பாலிவுட்டில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்திருந்தனர். பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது .
இந்நிலையில் இந்த படத்தை பாலிவுட் முன்னணி நிறுவனம் ஒன்று ரீமேக் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . மேலும் அதில் நடிகர் சல்மான் கான் ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடத்தப் பட்டதாகவும் சல்மான் கானுக்கு கதை பிடித்துப்போனதால் ஓகே சொல்லி விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் மாஸ்டர் பட ரீமேக்கின் முழு கதைக்காக சல்மான்கான் காத்திருக்கிறாராம். விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.