Categories
சினிமா தமிழ் சினிமா

“பாலிவுட்டையே ஒரு கலக்கு கலக்க இருக்கும் சமந்தா”…. வெளியான புதிய பட அப்டேட்….!!!!!!

நடிகை சமந்தா நடிக்க உள்ள பாலிவுட் திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு இவர் எது செய்தாலும் அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகின்றது. இவர் நடிப்பில் தற்போது யசோதா திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் சகுந்தலம் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் விக்கி கவுசல் ஜோடியாக தி இம்மோர்டல் அஸ்வத்தம்மா திரைப்படத்தில் அறிமுகமாக இருக்கின்றார். இத்திரைப்படத்தில் சாரா அலிகான் நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்பொழுது அவருக்கு பதிலாக சமந்தா நடிக்கின்றார். ஆதித்யாதர் இயக்கும் இத்திரைப்படத்தின் படபிடிப்பானது அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கின்றது. இத்திரைப்படமானது புராண கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுவதால் விக்கி கவுசல் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். இத்திரைப்படத்தின் மூலம் சமந்தா பாலிவுட்டை ஒரே கலக்கு கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |