Categories
சினிமா தமிழ் சினிமா

“பாலிவுட் நடிகர்-நடிகைகளை பின்னுக்கு தள்ளிய விஜய், சமந்தா”… முதலிடம் பிடித்து சாதனை….!!!!!

பிரபல இந்திய நடிகர்-நடிகைகள் பட்டியலில் விஜய், சமந்தா முதலிடம் பிடித்துள்ளனர்.

இந்திய அளவில் மிகவும் பிரபலமானவர்களாக இருப்பவர்கள் பாலிவுட் நடிகர்கள். அண்மைக்காலமாகவே பாலிவுட் திரைப்படங்களையும் தாண்டி தென்னிந்திய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்திய அளவில் மிகவும் பிரபலமான சினிமா நட்சத்திரங்கள் பட்டியலில் முதல் இடத்தை நடிகர் விஜய் பிடித்துள்ளார்.

ஆர்மேக்ஸ் ஸ்டார்ஸ் இந்தியா நிறுவனம் மிகவும் பிரபலமான திரைப்பட நட்சத்திரங்கள் பட்டியலை வெளியிட்டு இருக்கின்றது. இதில் நடிகர் விஜய் முதல் இடத்தை பிடித்துள்ளார். மேலும் நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தை நடிகை சமந்தா பிடித்துள்ளார். இதையறிந்த தென்னிந்திய ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

Categories

Tech |