பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான அசோகா படத்தில் நடிகர் அஜித் நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸாகும் என அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் நடிகர் அஜித் தமிழை தவிர பிற மொழி படங்களில் பெரிதாக நடித்ததில்லை. இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 2001-ஆம் ஆண்டு வெளியான அசோகா படத்தில் நடிகர் அஜித் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார் . தற்போது அந்த படத்தில் அஜித் நடித்த காட்சியின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.