பாலிவுட் நடிகையான ஆலியாபட் இப்போது கர்ப்பமாக உள்ளார். அவரும், அவரது கணவர் ரன்பீர் கபூரும் தங்களது முதல் திரைப்படமான பிரம்மாஸ்திரா வெளியாகிய பின் இத்தகவலை வெளியிட்டனர். அத்துடன் ஆலியா பட் இப்போது ஆடை வியாபாரத்தை துவங்கி இருக்கிறார்.
இந்த ஆடை கர்ப்பிணி பெண்களுக்குரிய மகப்பேறு ஆடையாகும். இது தொடர்பான தகவலை ஆலியாபட் தன் சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். அதனை தொடர்ந்து பாலிவுட்டில் கர்ப்பமாக இருக்கும் பிபாஷா பாசு உள்ளிட்ட சில நடிகைகளும் ஆலியா பட்டை தொடர்புகொண்டு மகப்பேறு ஆடைகளை அவரிடத்தில் வாங்கப் போவதாக செய்தி வெளியிட்டுள்ளனர்.