ராஜ் & டீகே இயக்கத்தில் உருவாகும் புதிய பாலிவுட் வெப் தொடரில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது இவர் விக்ரம், விடுதலை, மாநகரம் இந்தி ரீமேக் மும்பைகார் என பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இது தவிர இவர் நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார், கடைசி விவசாயி உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் தி பேமிலி மேன் வெப் சீரிஸை இயக்கி பிரபலமடைந்த ராஜ் & டீகே அடுத்ததாக இயக்கும் வெப் சீரிஸில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
https://twitter.com/RaashiiKhanna_/status/1421806810718097411
இந்த வெப்சீரிஸில் ஷாஹித் கபூர், ராஷி கண்ணா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்டுள்ளது என ராஷி கண்ணா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் ஆகிய படங்களில் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா இருவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.