கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி பற்றி பாரதிராஜா உருக்கமான வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார்.
உலக புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த 5ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, தனியார் மருத்துவமனையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அதனால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அவரை மாற்றி, செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் நலம் பெற வேண்டி திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் பிராத்தனை செய்து கொண்டிருக்கின்றனர்.
அவ்வகையில் இயக்குனர் பாரதிராஜா, எஸ்.பி.பி குறித்து உருக்கமான வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், ” எனது நண்பன் பாலு. ஆயிரம் நிலவே வா பாடி உச்சத்துக்கு உயர்ந்தாய். எனக்கு பல உதவிகள் செய்துள்ளாய். 16 வயதினிலே படத்தில் தொண்டை சரியில்லாததால் செவ்வந்தி பூ முடிச்ச சின்னத்தா என்ற பாடலை நீ பாட முடியாமல் போனது. அதன்பின்னர் நீ பாடிய இது ஒரு பொன்மாலைப் பொழுது பாடலை கேட்டு உலகமே வியந்து போனது. வைரமுத்து அன்றுதான் உதிர்க்கிறார். பாலு நீ வந்து விடுவாய். மறுபடியும் வந்து ஆயிரக்கணக்கான பாடல்களை பாடுவாய். பாலு வந்துருடா” என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார் பாரதிராஜா.
Get Well Soon For #SPBalasubramanyam pic.twitter.com/zO0bRU1Wze
— Bharathiraja (@offBharathiraja) August 18, 2020