புவியியலின் படி எப்பகுதி மிகக்குறைந்த மழைப்பொழிவைப் பெறுகிறதோ அது பாலைவனம் எனப்படுகிறது. பொதுவாக ஆண்டுக்கு 250 மி. மீ. க்கும் குறைவாக மழைப்பொழிவைப் பெறும் பகுதிகள் பாலைவனங்கள் எனப்படுகின்றன. புவியின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதி பாலைவனம் ஆகும். பாலைவனங்கள் வறண்ட நிலப்பகுதிகள் ஆகும். இங்கு பகலில் வெப்பம் மிகுந்தும் இரவில் குளிர் மிகுந்தும் இருக்கும். பாலைவனங்கள் மனிதவாழ்க்கைக்கு உகந்ததாக இருப்பதில்லை.
இப்படிப்பட்ட பாலைவனங்களில் மனிதர்கள் வாழ்வது என்பது மிகவும் சிரமமான விஷயம். அதிலும் இந்த பாலைவனத்தில் சில விலங்குகள் வசித்து வருகின்றன. அது எப்படி தங்களை பாதுகாத்துக் கொண்டு, அந்த கொடுமையான வெயிலில் வசித்து வருகிறது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். அதில் முதலாவது டெசெர்ட் டோர்டோய்ஸ் (desert tortoise) இந்த விலங்கால் பல வருடத்திற்கு தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ முடியும். இந்த டோர்டோய்ஸ்க்கு உணவே அங்குள்ள கத்தாழைகளும் சில விலங்குகளும் தானம்.
அதிக நேரம் இந்த டோர்டோய்ஸ் மண்ணுக்கு அடியில் தான் சென்று உயிர் வாழும். இரண்டாவது சைடுவ விண்டெர் ஸ்நேக் (side winder snake) இந்த பாம்பால் ஒரு மணி நேரத்திற்கு 18 மைல் வேகத்தில் செல்லக் கூடிய சக்தி உள்ளது. இது மற்ற விலங்குகளை வேட்டையாடுவதற்கு மண்ணுக்குள் புதைந்து மறைந்து இருந்து தாக்கும் சக்தி கொண்டது. மூன்றாவது (fennex fox) பின்னெஸ்பாக்ஸ், இந்த விலங்கு சகாரா பாலைவனத்தின் நடுப்பகுதியில் வசிப்பதாக கூறுகிறார்கள். இது தனது உணவுக்காக மண்ணில் புதைந்து இருக்கும் உயிரினங்களை மிகவும் நுணுக்கமாக வேட்டையாடி சாப்பிடுமாம்.