உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தனது சொந்த ஊருக்கு திரும்ப ஆசையாக இருக்கிறது என நடிகர் பிரித்திவிராஜ் தெரிவித்துள்ளார்.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக பிரித்திவிராஜ் இருக்கிறார். அவர் தற்போது ஆடுஜீவிதம் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். இத்திரைப்படம் ஒரு நாவலின் அடிப்படையில் எடுக்கப்படும் படமாகும். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணத்தினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படப்பிடிப்பு அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு அவர்கள் சிக்கிக் கொண்டுள்ளார். தனது சொந்த ஊருக்கு திரும்ப விரும்புவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 24 ஆம் தேதி நிறுத்தப்பட்டது. பின்னர் அனைவரும் பாதுகாப்பாக படப்பிடிப்பு நடத்தினர். அதை அதிகாரிகள் உறுதி செய்த பின்னர் படப்பிடிப்பு தொடர்வதற்கு அனுமதி அளித்தனர். ஆனால் ஊரடங்கு உத்தரவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டதால் மீண்டும் கடந்த 27ம் தேதி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பாலைவனத்தில் உள்ள முகாமிலேயே தங்கி உள்ளோம் எனவும் படப்பிடிப்புக்காக உணவு தங்குமிடம் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது எனவும் கூறிருந்தார்.
எங்களுடைய குழுவிலுள்ள மருத்துவரும், ஜோர்டான் அரசால் நியமிக்கப்பட்டுள்ள மருத்துவர் ஒருவரும் எங்களை சோதனை செய்தனர். உடனடியாக படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவதற்கு வாய்ப்பில்லை எனவும் கிடைக்கும் வாய்ப்பில் எங்களது ஊருக்கு திரும்ப வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பமாக இருக்கிறது எனவும் தெரிவித்திருந்தார்.