Categories
உலக செய்திகள்

“பாலை இப்படியா கொட்டுவீங்க”….. அதிகரிக்கும் எரிபொருளின் விலை…. போராட்டத்தில் விவசாயிகள்….

எரிபொருளின் விலை அதிகரித்து வருவதை தொடர்ந்து கிரேக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

27 உறுப்பு நாடுகள் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் எரிபொருள் மீது அதிக வரி விதிப்பதால் கிரேக்க விவசாயிகள் தங்கள் எரிபொருள் செலவை குறைக்க மானியங்களை கோரி வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை70 cents என இருக்க கிரேக்கத்தில்1.60 யூரோ என வசூலிக்கப்படுகிறது. மேலும் எரிபொருளின் விலை அதிகரிப்பை  தொடர்ந்து நெடுஞ்சாலைகளை முடக்குவதில் உறுதியாக இருப்பதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மத்திய கிரீஸில் உள்ள லாரிசா   நகருக்குத் தெற்கே ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த கூட்டத்தில் கிரேக்கப் பிரதமர் kyriakos Misotakisவுடன்  விவசாயிகள்  உடன் ஒரு சந்திப்பை கோர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விவசாயிகள் ஏற்கனவே லாரிசாவில் வடமேற்கில் உள்ள கோசானி  நகரத்துடன் இணைக்கும் ஒரு பெரிய சாலையை  சுமார் 10 நாட்களாக முடக்கி வருகின்றனர். இந்நிலையில் தங்களின் போராட்டத்தில் ஒரு பகுதியாக  ஞாயிற்றுக்கிழமை சாலையில் பாலை கொட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதே நிலை நீடித்தால் நாங்களும், எங்கள் மந்தைகளும் உயிர் பிழைப்போமா  என்பது கேள்விக்குறியாக உள்ளது என விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Categories

Tech |