கோவையில் வருமான வரித்துறை அதிகாரிகளால் பால்தினகரனுக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் 300 வருமான வரித்துறை அதிகாரிகள் குழுக்களாக பிரிக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டுவருகிறார்கள். அதாவது இயேசு அழைக்கிறார் அறக்கட்டளை, கோவையின் காருண்யா பல்கலைக்கழக நிறுவனரான பால் தினகரனுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், ஜெபக்கூடங்கள் மற்றும் பல்கலைக்கழகம் போன்ற அனைத்து பகுதிகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகளால் சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இந்நிலையில் கோவையில் இருக்கும் பால் தினகரனின் வீடு மற்றும் அவரின் அலுவலகம் உட்பட பல இடங்களில் தற்போது சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சோதனையானது நேற்று முன்தினம் அதிகாலையில் தொடங்கப்பட்டது. தற்போது மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே காருண்யா பல்கலைக்கழகம் முழுவதும் காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இயேசு அழைக்கிறார் அறக்கட்டளைக்கு உரிய இடங்களில் சோதனை நடத்தப்பட்ட போது அங்கிருந்து பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.