விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பால் வியாபாரி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகாசி ராணி அண்ணா காலனி சேர்ந்தவர் பால் வியாபாரி முனியசாமி இவரது சகோதரர் சோலையப்பன் வளர்த்துவரும் பன்றிகளை யாரோ அடிக்கடி திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முனியசாமி மேற்கொண்ட விசாரணையில் பன்றிகளை திருடியது துலுக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிலர் என்பது தெரியவந்துள்ளது. இதை தட்டிக்கேட்ட போது ஏற்பட்ட தகராறில் முனியசாமியை கடந்த 21-ஆம் நாள் மர்ம நபர்கள் சிலர் வெட்டிக் கொன்றனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் துலுக்கப்பட்டியை சேர்ந்த 8 பெயரை கைது செய்து அவர்களிடமிருந்த ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர்.