நீங்கள் தினமும் பால் அதிகமாக குடித்தால் என்னென்ன ஆபத்துகள் ஏற்படும் என்பது பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
நம் உடலுக்கு அதிக சத்துக்களைத் தருவதில் முக்கியமான ஒன்று பால். அது ஊட்டச்சத்து மிக்கது. இதனை தினமும் குடித்தால் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கும். அதனால் எலும்புகள் மேலும் உறுதியாகும். தசைகள் வளர்ச்சி அடையும். ஆனால் அதனை அளவுக்கு அதிகமாக குடித்தால் ஆபத்து ஏற்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. எதையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அமிர்தமும் நஞ்சு தான். அதனைப் போலவே பால் அதிகமாக குடித்தால் அது நஞ்சாக மாறிவிடும். ஒரு நாளைக்கு அளவுக்கு அதிகமாக பால் குடித்தால் எலும்பு முறிவு ஏற்படும் ஆபத்து உள்ளது.
இது பற்றி நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு நாளைக்கு மூன்று டம்ளர் தினமும் பால் குடித்தால் இறப்பின் ஆபத்து இரண்டு மடங்கு அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்கே ஆபத்து அதிகம். பாலில் கால்சியம், விட்டமின் டி, விட்டமின் பி 12 என்ன இருந்தாலும் ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் பால் மட்டுமே குடிக்க வேண்டும். அதனை அளவுக்கு அதிகமாக குடித்தால் பக்கவிளைவுகள் ஏற்படும். அப்படி உடல் சோர்வு, வயிறு மந்தம், நோய் அலர்ஜி போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே ஒரு நாளைக்கு ஒரு டம்ளர் பால் மட்டுமே குடிக்க வேண்டும். இதனை பெண்கள் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.