Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“பால் குடங்களுடன் ஊர்வலம் சென்ற பெண்கள்”… கொட்டிய தேனீக்கள்….பெரும் பரபரப்பு….!!!!!

பால்குடம் எடுத்து வந்த பெண்களை தேனீக்கள் கொட்டிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காளசமுத்திரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த சில நாட்களாக திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று  பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் 108 பெண்கள் பால்குடங்களை எடுத்து கோவிலின்  அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது கோவிலின் யாகசாலை தீயில் எழுந்த புகை அருகில் இருந்த மரத்திற்கு பரவியுள்ளது.

இதனால் மரத்தில் இருந்த தேனீக்கள் கலைந்து பால்குடம் எடுத்து வந்த பெண்களை கொட்டியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த பெண்களை விழா குழுவினர் மீட்டு சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |