3 மாத குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம்பேட்டை பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்பரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அன்பரசிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சபரிவாசன் என பெயரிட்டனர். நேற்று இரவு அன்பரசி தனது குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்க வைத்துள்ளார்.
காலை எழுந்து பார்த்தபோது குழந்தை அசைவின்றி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அன்பரசி தனது குழந்தையை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குழந்தை இறந்ததற்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.