2 மாத பெண் குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் நிலோபர்(26) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் பால் கொடுத்துவிட்டு நிலோபர் தனது குழந்தையை தூங்க வைத்துள்ளார். இதனை அடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தையை நிலோபர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.