Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பால் பாக்கெட்டுகளை ஏற்றி வந்த மினி லாரி….. சாலையில் கவிழ்ந்து விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த டிரைவர்…!!!

பால் பாக்கெட்டுகளை ஏற்றி வந்த மினி லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் உயிர் பிழைத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பகுதியில் வசித்த ஜெயின்(25) என்பவர் தனியார் பால் நிறுவனத்திற்கு சொந்தமான மினி லாரியில் பால் பாக்கெட்டுகளை ஏற்றிக் கொண்டு வந்தார். இந்த மினி லாரி திருக்கோவிலிலிருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி வந்துகொண்டிருந்தபோது எதிரே அதிவேகமாக வந்த லாரி மினி லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இதனால் நிலைதடுமாறிய மினி லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியது. ஆனால் இந்த விபத்தில் மினி லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

மேலும் இந்த விபத்தில் மினி லாரியிலிருந்த சுமார் 700 லிட்டர் பால் பாக்கெட்டுகள் ரோட்டில் கொட்டியது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் காயமடைந்த மினி லாரி ஓட்டுநர் ஜெயினை சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ரோட்டில் கொட்டி கிடந்த பால் பாக்கெட்டுகளை அகற்றினார்கள். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |