Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“பால், பிஸ்கெட் கூட வாங்க முடியல…. குழந்தைகளுடன் தவிக்கும் இளம்பெண்”…. இலங்கை அகதிகள் வேதனை….!!

குழந்தைகளுக்கு பால், பிஸ்கெட் வாங்கவும் பணம் இல்லாமல் தவித்து வருவதாக இலங்கையில் இருந்து அகதியாக வந்த பெண் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரை இல்லாத நிலையில் அனைத்து பொருட்களும் விலை சரமாரியாக உயர்ந்துள்ள நிலையில் பொதுமக்கள் பஞ்சத்தின் காரணமாக இலங்கையில் இருந்து தப்பித்து தமிழகத்திற்கு அகதிகளாக வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் இருந்து நேற்று 5 குடும்பத்தை சேர்ந்த மொத்தம் 15 பேர் அகதிகளாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு படகு மூலம் வந்தனர்.

அப்போது யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த பெண் பேபி ஷாலினி (22) கூறுகையில் தற்போது இலங்கையில் காய்கறியின் விலை ரூ.300 லிருந்து 500 ரூபாய் வரையிலும், அரிசி ஒரு கிலோ 300 ரூபாய், சீனி 300 ரூபாய், பருப்பு 300 ரூபாய் மற்றும் குழந்தைகளுக்கான பால்பவுடர், பால் பாக்கெட், பிஸ்கெட்  விலை என அனைத்து பொருட்களின் விலைகளும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

மேலும் அங்கு வேலைவாய்ப்பு இல்லாததால் குழந்தைகளுக்கு சாப்பாடு வாங்கி தர கூட வழியில்லாமல் தவித்து வருகிறோம். எனவே பிள்ளைகளின் உயிரை காப்பாற்ற கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளை விற்று, அந்த பணத்தை வைத்து இலங்கையிலிருந்து தப்பி வந்ததாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |