லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வந்தாரவல்லி கிராமத்தில் சின்னபையன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி அவரஞ்சி, மகன் பழனி, உறவினர் தங்கவேலு, மகாலிங்கம் ஆகியவருடன் திருக்கோவிலூர் பகுதியில் அமைந்துள்ள தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து காரில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள தண்டராம்பட்டு சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பால் லாரி இவர்களது காரின் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் படுகாயம் அடைந்த சின்னபையன், அவரஞ்சி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் காயம் அடைந்த பழனி, தங்கவேல், மகாலிங்கம் ஆகிய 3 பேரையும் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பழனியும் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இந்நிலையில் உயிரிழந்த சின்னபையன், அரவஞ்சி ஆகியோரின் சடலம் செங்கம் அரசு மருத்துவமனையிலும், பழனியின் சடலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலும் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குடும்பத்தினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.