Categories
மாநில செய்திகள்

பால் விற்பனை அதிகரிப்பு உண்மைதான்!… ஆனால்!…. அமைச்சர் நாசர் திடீர் விளக்கம்….!!!!

ஆவின் ஆரஞ்சு பாக்கெட் பாலின் விலையானது அதிகரிக்கப்பட்ட நிலையில், பச்சைநிற பாக்கெட் பாலுக்கு தட்டுப்பாடு நிலவியிருப்பதாக பா.ம.க தலைவரான அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார். இது தொடர்பாக அமைச்சர் நாசர் கூறியிருப்பதாவது “பால் விற்பனையானது அதிகரித்திருப்பது உண்மைதான். ஆனால் தேவைக்கு ஏற்ப பூர்த்திசெய்யும் அடிப்படையில் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஃபுல் கிரிம் பால் லிட்டருக்கு ரூபாய்.12 விலை அதிகரிக்கப்பட்டு உள்ளது. பிற நிறுவனங்களை ஒப்பிடும்போது ஆவின் பாலின் விலை ரூபாய்.10 குறைவாகவே இருக்கிறது. அதுவும் சந்தா அட்டைதாரர்களுக்கு ரூ.46 எனும் விலையில் தான் இப்போது வரை விநியோகம் செய்யப்படுகிறது” என தெரிவித்தார்.

Categories

Tech |