Categories
மாநில செய்திகள்

பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு…. 300 கோடி இழப்பை சந்திக்கும் ஆவின் நிறுவனம்…!!!!!

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் கடந்த கால ஆட்சியாளர்களால் சுமார் 1000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பை சந்தித்தது. இந்த நிலையில் இப்பொழுது திமுக அரசு பால் விற்பனை விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தது. அதனால் கூடுதலாக சுமார் 300 கோடி ரூபாய் வரை இழப்பை சந்தித்திருக்கிறது.

மேலும் எந்த பால் நிறுவனமாக இருந்தாலும் பாலை கொள்முதல் செய்து அப்படியே விற்பனை செய்தால் இழப்பு ஏற்படாது. ஆனால் ஆவின் நிறுவனத்தில் ஒரு நாளைக்கு சுமார் 39 லட்சம் லிட்டர் பால் வரை கொள்முதல் செய்யப்படும் நிலையில் பால் பாக்கெட் மூலம் விற்பனை 26 லட்சம் லிட்டர் வரை மட்டுமே நடைபெறுகின்றது. இதனைத் தொடர்ந்து தினமும் உபரியாக பாலை 13 லட்சம் லிட்டர் வரை உப பொருட்கள் மற்றும் பால் பவுடராக மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.

மேலும் தமிழகத்தில் பால் பொருட்களுக்கு அதிக தேவைகள் இருந்தாலும் அவற்றை முறையாக சந்தைப்படுத்துவதில் கவனம் இல்லாத காரணத்தினால் உபரியாக பாலை பவுடராக மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதனால் தற்போது ஆவின் பால் நிலையங்களில் 16 ஆயிரம் டன் பால் பவுடர் மற்றும் 6,000 டன் வெண்ணை தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இவற்றின் காரணமாக மேலும் பல கோடி ரூபாய் கூடுதலாக இழப்பு ஏற்பட்டுள்ளதால் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகின்றது.

அவற்றின் தொகையை 10 வார காலமாக அவர்களுக்கு கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 600 கோடி ரூபாய் வரை நிலுவையில் இருப்பதால் ஆவினுக்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்கள் விவசாய மக்கள் நெருக்கடியில் உள்ளார்கள். இந்த நிலையில் ஏற்பட்டுள்ள இழப்புகளை சரிசெய்ய பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்கான தொகையை நிலுவையின்றி வழங்க வேண்டும் என்றால், கொள்முதல் செய்த பாலை அப்படியே விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தநிலையில் ஆவின் பால் நிறுவனம் ஏற்கனவே ஏற்பட்ட இழப்பிலிருந்து மீளவும் இனிமேல் இழப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பாலை அப்படியே விற்பனை செய்ய வேண்டும். இதுவே பால் முகவர்களின் நீண்ட கால கோரிக்கையாகும். இனியாவது ஆவின் நிர்வாகம் முன்னிலையில் வரவேண்டும். இல்லையென்றால் ஆவின் நிறுவனமே அழிந்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |