திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் தி.மு.கவினுடைய வேட்பாளர் வெற்றி வாகை சூடியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமாக 5 தொகுதிகள் உள்ளது. அதில் ஒன்றான தென்னகத்தினுடைய ஆக்ஸ்போர்ட் என்ற பெருமைக்குரிய பாளையங்கோட்டை தொகுதியில் மொத்தமாக 2,73,379 வாக்காளர் இருக்கும் நிலையில் தேர்தல் நாளன்று 1,61,357 நபர்கள் தங்களுடைய வாக்கினை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பாக அப்துல்வகாப் மற்றும் அ.தி.மு.க சார்பாக ஜெரால்டு உட்பட 10 வேட்பாளர் போட்டியில் உள்ளனர்.
இதனையடுத்து வாக்குகளை எண்ணும்போது ஒவ்வொரு சுற்றுகளிலும் அ.தி.மு.க மற்றும் தி.மு.க வேட்பாளர்கள் மாறிமாறி முன்னிலை வகித்த நிலையில், இறுதியாக தி.மு.க வேட்பாளரான அப்துல்வகாப் முன்னிலை பெற்று 89,117 வாக்கினையும், அ.தி.மு.கவினுடைய வேட்பாளரான ஜெரால்ட் 36,976 வாக்கினையும் பெற்றுள்ளனர். அதாவது 52,141 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.கவினுடைய வேட்பாளரான அப்துல்வகாப் வெற்றி பெற்றுள்ளார்.