தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.
மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் சீமான் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நாதக கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இதில் 117 ஆண் வேட்பாளர்களும், 117 பெண் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் சீர்காழியில்பரப்புரை மேற்கொண்ட சீமான், பாவம் பார்த்தாவது எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று மக்களிடம் கெஞ்சியுள்ளார்.