நடிகை ஷாலு ஷம்மு பாவாடை தாவணியில் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் ஷாலு ஷம்மு . இதை தொடர்ந்து இவர் மிஸ்டர் லோக்கல், ரெக்க உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தார். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷாலு ஷம்மு அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
சமீபத்தில் நடிகை ஷாலு ஷம்மு சேலையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலானது . இந்நிலையில் பாவாடை தாவணியில் போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை ஷாலு ஷம்மு வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.