“பாஸ்ட் அண்ட் பியூரியஸ்” திரைப்படத்தின் பாகம் 10-ல் பிரபல ஹாலிவுட் நடிகர் இணைந்து நடிக்கவுள்ளார்.
சினிமா உலகில் கார் ரேஸ் தொடர்பாக நிறைய படங்கள் வந்தாலும் “பாஸ்ட் அண்ட் பியூரியஸ்” படத்தின் பகுதி ரசிகர்களுக்கு மத்தியில் தனியிடம் பிடித்திருக்கிறது. இதுவரை இப்படத்தின் ஒன்பது பாகங்கள் வெளியாகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் வின் டீசல், மிச்செல் ரோட்ரிகஸ், ஜோர்டானா ப்ரீவ்ஸ்டார், ஈவா மெண்டஸ்,டைரிஸ் கிப்சன், கிரிஸ் பிரிட்ஜஸ், லூகாஸ் பிளாக், சங் காங், கேல் கேடட், ஜேசன் ஸ்டாதம் டுவைன் ஜான்சன், கர்ட் ரசல், நாதாலியா இம்மானுவேல், சார்லஸ் தெரோன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.
இந்த நிலையில் தற்பொழுது பத்தாவது பாகம் உருவாகி கொண்டிருக்கிறது. தற்போது எப்10 பகுதியில் வின் டீசலுடன் சேர்ந்து ஹாலிவுட் முன்னணி நட்சத்திரமான நடிகர் ஜேசன் மோமோவா ஒப்பந்தமாகியுள்ளார். இது அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ஜேசன் மோமோவா இப்படத்திற்கும் முன்பு “கேம் ஆப் த்ரோன்ஸ்”, “அக்வாமேன்” உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை ஈர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.