பாஸ்போர்ட்டை கிழித்து சேதப்படுத்திய இளைஞரை போலீசார் கைது செய்தார்கள்.
திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் வந்த நிலையில் விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டார்கள்.
அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காமராஜபுரம் பகுதி சேர்ந்த பிரபாகரன் என்பவரின் பாஸ்போர்ட்டை சோதனை செய்தபொழுது நான்கு பக்கங்கள் கிழிக்கப்பட்டிருந்தது. இதனால் போலீசார் பாஸ்போர்ட்டை கைப்பற்றி சேதப்படுத்திய பிரபாகரனை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்கள். இதை தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தார்கள்.