Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணிக்கு சரியான பாடம் புகட்டுவோம்”… திண்டுக்கல்லில் கனிமொழி பரபரப்பு பிரசாரம்..!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், அதிக அளவு வாக்குகள் வித்தியாசத்தில் நத்தத்தில் தி.மு.க. வேட்பாளரை வெற்றிபெற வைக்க வேண்டும். அரசு கலைக்கல்லூரி மிகவும் பின்தங்கிய பகுதியான இங்கு தொடங்கப்படும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். நாடு முழுவதும் விவசாயிகள் விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அந்த பிரச்சனை தமிழக முதல்வருக்கு தற்போதுதான் தெரியவந்துள்ளது. மத்திய அரசிடம் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் வலியுறுத்துவதாக கூறுகிறார்.

பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்ட வேண்டும். 250-க்கும் மேற்பட்ட பெண்கள் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த அரசு குற்றம் செய்தவர்களை பாதுகாக்கவே முயல்கிறது. ரூ.7000 கோடி கடன் தள்ளுபடி தி.மு.க. தலைவர் கருணாநிதி விவசாயிகளுக்காக அறிவித்துள்ளார். பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அமையவுள்ள தி.மு.க. அரசும் அறிவித்துள்ளது. கருணாநிதி பிறந்த நாளான ஜூன் மூன்றாம் தேதி ரூ.4 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படும். 3 1/2 லட்சம் உள்ளூர் இளைஞர்களுக்கு தமிழகத்தில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் இவ்வாறு அவர் பேசினார்.

Categories

Tech |