பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் ஊர்வலமாக சென்றனர்.
பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன தின விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க கட்சி உறுப்பினர்கள் ஊர்வலம் நடத்தினார்கள். இந்த ஊர்வலம் செட்டிநாடு பகுதியில் இருந்து பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் வரை நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.பி சசிகலா கலந்து கொண்டார்.
இந்த ஊர்வலத்தில் மாவட்ட பொருளாளர் முத்துராமன், மாநிலச் செயலாளர் உமாபதி ராஜன், பொதுச்செயலாளர் சொக்கலிங்கம், மண்டல தலைவர்கள் அஜித் குமார், நாகராஜன், சிவபிரசாத், ராகவன், மாநகராட்சி கவுன்சிலர்கள் ரமேஷ், ஐயப்பன், வீர சூர பெருமாள், சுனில் குமார் மற்றும் மகளிர் அணி சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் முடிந்த பிறகு கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும் ஊர்வலத்தில் ஈடுபட்ட 80 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.