பாஜகவின் 42 வது நிறுவன தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பாஜக சார்பாக சென்னை தியாகராய நகரில் நேற்று 2 இடங்களில் பாஜக நிறுவன நாள் கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கலந்துகொண்டார். அப்போது வடக்கு போக் சாலை நரசிம்மன் தெருவில் நடந்த நிகழ்ச்சியில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் கொடியை தலைகீழாக ஏற்றிய வைத்துவிட்டார்.
கொடியை ஏற்றும்போது கொடியை தலைகீழாக இருப்பதை யாரும் சரியாக கவனிக்கவில்லை. குஷ்புவும் அதனை கவனிக்கவில்லை. கொடியை ஏற்றிவிட்டு உடனடியாக அங்கிருந்து புறப்பட்டார். இந்த சம்பவத்தால் பாஜக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குஷ்பு புறப்பட்டுச் சென்றதும் நிர்வாகிகள் கொடியை மீண்டும் கீழே இறக்கி சரி செய்தனர். இதனால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.