சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ் மாற்று கட்சியினர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டை அருகே புதுகுறிச்சி ஊராட்சியில் அ.தி.மு.க, தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் உள்ளனர். மாற்று கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளில் இருந்து முருகானந்தம் மகேந்திரன் காசிராஜன் கார்த்திக் உட்பட 48 பேர் அந்த கட்சியில் இருந்து விலகியுள்ளனர். இதையடுத்து அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் எச்.ராஜா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் செல்வராஜ், தேவகோட்டை பகுதியில் முன்னாள் யூனியன் துணை தலைவர் புதுக்குறிச்சி ராமலிங்கம் ஆகியோர் உடன் இருந்துள்ளனர். மாற்று கட்சியினர் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் எச்.ராஜாவுக்கு சால்வை போர்த்தி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர்.