Categories
மாநில செய்திகள்

பா.ஜ.க மாநில துணைத் தலைவர் அதிரடி கைது…. அதிர்ச்சியில் பா.ஜ.கவினர்…. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு….!!!!

பாஜக மாநில துணைத்தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருப்பதால் மத்திய அரசாங்கத்தால் நாடு முழுவதும் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 11-ம் தேதி தமிழக பாஜக சார்பில் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியில் மாபெரும் பாதயாத்திரை நடைபெற்றது. இதில் பாஜக மாநில துணை தலைவர் கே.பி ராமலிங்கம் தலைமையில் பாஜக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தின் போது பாரதமாதா கோவிலுக்கு சென்ற பாஜகவினர் பாரதமாதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் கோவில் பூட்டி கிடந்ததால் பாஜகவினர் காவல் துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்திடம் கோவில் கதவை திறக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். ஆனால் காவலர்களும், கோவில் நிர்வாகமும் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் கோவிலை திறக்க முடியாது என்று கூறி வெளியில் இருந்து தரிசனம் செய்துவிட்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பாஜகவினர் கோவில் பூட்டை உடைத்து பாரத மாதா கோவிலுக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் பாஜகவினர் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையின் போது பாஜக ஒன்றிய தலைவர், ஒன்றிய செயலாளர், முன்னாள் நகர தலைவர் மற்றும் மாவட்ட இளைஞரணி தலைவர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக இன்று கே.பி ராமலிங்கத்தை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழக நிதி அமைச்சரின் காரின் மீது செருப்பு வீசி ஏற்கனவே சிக்கலில் மாட்டிக் கொண்ட பாஜகவினருக்கு கே.பி ராமலிங்கம் கைது செய்யப்பட்டது மென்மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |