Categories
அரசியல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பா.ஜ.க வுடைய வேலையே கூட இருப்பவனுக்கு குழி பறிக்கிறது தான் – திருமாவளவன்

அருவருப்பான அரசியலை அரங்கேற்ற கூடிய கட்சி பாரதிய ஜனதா என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகே சோகனூரில் நடைபெற்ற இரட்டை கொலையை கண்டித்து ராணிப்பேட்டையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்தில் பேசிய திருமாவளவன் திராவிட இயக்கக் கொள்கைகள் இல்லாத கட்சியாக அதிமுக மாறிவிட்டது என்றார். கூட இருப்பவர்களுக்கு குழி பறிப்பது தான் பாஜகவின் வேலை என்றும் அவர் சாடியிருக்கிறார்.

மேலும் பேசிய அவர் திராவிட அரசியல் ஜெயலலிதா அம்மையார் தலைமை ஏற்றதும்  75%  நீத்து போனது, 25% சமூக அரசியல் அதில்  ஒட்டிக் கொண்டிருந்தது. எடப்பாடி தலைமை ஏற்றதும் அது மோடி அதிமுகவாக மாறிவிட்டது. பிஜேபியின் பினாமியாக மாறிவிட்டது. அதிமுக எலெக்சன் பிறகு இருக்காது, நீத்து போய்விடும். பாமகவில் இருப்பவர்கள் எல்லாம் பிஜேபியில் போய் சேர்ந்து விடுகிறார்கள். நான் ஜோசியம் சொல்லவில்லை, இதுதான் நடக்கப் போகிறது.

ஏனென்றால் பிஜேபியின் வேலையே கூட இருக்கிறவர்களுக்கு குழி பறிப்பது தான். அந்த கட்சியில் யார் ஸ்மார்ட்டா இருக்கிறார்களோ அவர்களை உள்ளே தூக்கி விடுவார்கள். சட்டமன்ற தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என்று திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். அதிமுகவில் ஒரு சிலர் வெற்றி பெற்றால் கூட அவர்களை விலைக்கு வாங்க பாஜக தயாராகி விட்டதாக அவர் தெரிவித்தார்.

Categories

Tech |