பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் டிரைலர் வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
முன்னணி இயக்குனரான பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “நட்சத்திரம் நகர்கிறது”. இந்த படம் முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்டதாக தயாராகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். அத்துடன் கலையரசன், ஹரிகிருஷ்ணன், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் உட்பட பலர் இத்திரைப்படத்தில் நடித்து உள்ளனர்.
நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழிபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு 2ஆம் போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் இசையமைப்பாளர் தென்மா இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படம் வரும் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகி தற்பொழுது வைரலாகி வருகின்றது. தன்னுடைய படங்களின் வாயிலாக அழுத்தமான அரசியலை பேசும் ரஞ்சித், நட்சத்திரம் நகர்கிறது படத்தில் எல்ஜிபிடி சமூகம் பற்றி பேசி இருக்கின்றார்.ஏன் பொண்ணு பொண்ணும், பையனும் பையனும் லவ் பண்ண கூடாதா? என டிரைலரில் இடம் பெற்றுள்ள வசனமே பல விவாதங்களை இணையத்தில் ஏற்படுத்தி இருக்கின்றது.