Categories
சினிமா தமிழ் சினிமா

பா.ரஞ்சித்- சமுத்திரகனி இணையும் ‘ரைட்டர்’… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!!

பா.ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரகனி நடித்துள்ள ரைட்டர் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பா.ரஞ்சித். கடைசியாக இவர் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார் . மேலும் பா.ரஞ்சித் படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் சமுத்திரகனி நடித்துள்ள ‘ரைட்டர்’ படத்தை தயாரித்துள்ளார்.

பிராங்கிளின் ஜேக்கப் இயக்கியுள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரைட்டர் படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |