பா.ரஞ்சித் தயாரித்த ரைட்டர் திரைப்படத்தை பிரபல இயக்குனர் பார்த்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அறிமுக இயக்குனரான பிராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் ரைட்டர் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் இனியா, போஸ் வெங்கட் ஆகிய பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்த நிலையில் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் மற்றும் கோல்டன் ரேஷன் பிலிம்ஸ் ஆகியவற்றுடன் பா.ரஞ்சித்தின் நீளம் புரோடக்சன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்தது.
இந்த நிலையில் பிரபல பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப் ரைட்டர் திரைப்படத்தை பார்த்து இருக்கிறார். இவர் சர்ச்சைக்குரிய திரைப்படங்கள் மற்றும் அழுத்தமான கதை களங்கள்
கொண்டு படமெடுப்பதில் சிறந்தவர். வெற்றிமாறனும் அனுராக்கும் நல்ல நண்பர்கள் என்பதால் வெற்றிமாறன் ரைட்டர் திரைப்படத்தை பார்க்குமாறு அவரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். ஆகையால் ரஞ்சித், அனுராக் மற்றும் பிராங்கிளின் ஜேக்கப் உள்ளிட்ட மூவரும் இத்திரைப்படத்தைப் பார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.