7 .5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் 9,981 மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்..
சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கழக இயக்ககத்தில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் பொன்முடி.. அப்போது அவர் அளித்த பேட்டியில், 2. 10 லட்சம் பொறியியல் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. 20 முதல் 23 வரை 7.5% இட ஒதுக்கீட்டு பிரிவு, சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.வருகின்ற 20 முதல் 23ஆம் தேதி வரை 7.5% இட ஒதுக்கீட்டு பிரிவு, சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறும். வருகிற 25ஆம் தேதி முதல் அக்டோபர் 21 வரை பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும்.
1.69 லட்சம் மாணவர்களின் பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 9,981 மாணவிகள் பொறியியல் படிப்புகளில் சேரும் பட்சத்தில் ரூபாய் 1000 வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் 22,751 மாணவ, மாணவிகளின் பெயர்கள் தர வரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
பிளஸ் டூ மற்றும் 10ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடப்படுவதால் இந்தாண்டு ஒரே ரேண்டம் எண் இல்லை.
இந்த ஆண்டு 2,11, 905 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்தாண்டை விட 36, 975 பேர் அதிகம்
தொழிற்கல்வி படித்த மாணாக்கர்களுக்கு பொறியியல் படிப்பு செயற்கையில் 2 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும்.
www.tneaonline.org என்ற இணையதளத்தில் தரவரிசை பட்டியலை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த நிலையில் பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.