கேரளா, தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுதல், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆள் சேர்த்தல், பயிற்சி நடத்தல் உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை இணைந்து பிஎஃப் அமைப்பினர் வீடு, அலுவலகத்தில் சோதனை செய்தனர். அப்போது 350 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. அதனை தொடர்ந்து பிஎப்ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிப்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது.
இதற்கிடையில் பிஎஃப்ஐ அமைப்புக்கு எதிரான சோதனையை கண்டித்து கேரளாவில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கடந்து செப்டம்பர் 23ஆம் தேதி ஒரு நாள் அடைப்பு போராட்டத்தை நடத்தினர். அப்போது 71 அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதாகவும், 11 ஊழியர்கள் காயமடைந்துள்ளதாகவும் கேரள மாநில சாலை போக்குவரத்து கழகம் சார்பில் இழப்பீடு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், இரண்டு வாரத்திற்குள் தடை செய்யப்பட்ட பி எஃப் ஐ அமைப்பும், அதன் பொதுச்செயலாளர் அப்துல் சத்தாரும் ரூ.5.20 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.