Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் கணக்கில் வங்கி கணக்கு அப்டேட் செய்வது எப்படி?…. வாங்க பார்க்கலாம்…..!!!!

பிஎஃப் தொடர்பான சேவைகள் மற்றும் அப்டேட்டுகள் அனைத்திற்கும் EPFO அமைப்பின் வெப்சைட்டில் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அதன் மூலமாக பிஎஃப் கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் போன்ற விவரங்கள் அனைத்தையும் பார்க்க முடியும். பிஎஃப் பணம் சரியாக வரவேண்டும் என்றால், வங்கி கணக்கு விபரங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் பிஎஃப் பணம் வருவதில் சிக்கல் ஏற்பட நேரிடும்.

அதனால் பிஎஃப் சந்தாதாரர்கள் தங்களது வங்கிக் கணக்கு விபரங்களை அப்டேட் ஆக வைத்திருப்பது மிகவும் அவசியம். அதன்படி பிஎஃப் கணக்கில் வங்கிக் கணக்கு விவரங்கள் அனைத்தையும் ஆன்லைன் மூலமாகவே நீங்கள் அப்டேட் செய்து கொள்ளலாம். அதற்கு முதலில் நீங்கள் பிஎஃப் அமைப்பின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்குச் செல்ல வேண்டும். (https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/)

உங்களது லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து உள்நுழைய வேண்டும்.

‘Menu’ செக்சனில் சென்று ‘Manage’ என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

அதில் வரும் டிராப் டவுன் பாக்ஸில் KYC என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

புதிய பக்கம் ஒன்று ஓப்பன் ஆகும். அதில் ‘Bank’ என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுத்தால் Document number, Name, IFSC code போன்ற விவரங்களை நீங்கள் பார்க்கலாம். இதில் உங்களது சரியான வங்கிக் கணக்கு விவரங்களை அப்டேட் செய்து save கொடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கை ஒப்புதலுக்காக அனுப்பப்படும். உங்களது நிறுவனம் இதை சரிபார்த்தவுடன் ஒப்புதல் கிடைத்துவிடும். இதற்கான உறுதிப்படுத்துதல் எஸ்.எம்.எஸ். உங்களுக்கு அனுப்பப்படும்.

Categories

Tech |