EPFOA தற்போது ஊழியர்கள் வைப்புநிதி வைத்திருக்கும் அனைவரும் தங்களுடைய நாமினியை குறிப்பிட்டிருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. இவற்றிற்கான கடைசி நாள் வருகிற டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி ஆகும்.நம் நாட்டில் ஏராளமான மாத சம்பளம் வாங்குபவர் மற்றும் தொழிலாளர்கள் தனக்கென்று சம்பளத்தில் ஒரு பகுதியை வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய திட்டத்திற்காக தொழிலாளர் வைப்புநிதியை கொண்டு உள்ளனர்.இவ்வாறு அவர்கள் சேமிக்கும் பணத்தை அவர் இறக்கும் பொழுது அந்தப்பணத்தை யாருக்கு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை.
அதனால், பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.எனவே, முன்னெச்சரிக்கையாக அந்த பிஎஃப் பணம் யாருக்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிட வேண்டுமென்று தெரிவித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு கணக்கரும் தங்களுடைய பிஎஃப் கணக்கு தொடர்பான விவரங்களை குறிப்பிட வேண்டும். மேலும் நாமினி தொடர்பான விவரங்களை டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் உள்ளீடாக தரவேண்டும். மேலும் காப்பீடு ஓய்வூதியம் மற்றும் பிஎஃப் தொகை மூலமாக கணவரின் பெற்றோர்கள், மனைவி மற்றும் குழந்தைகளின் நலனை பாதுகாப்பதற்கு நாமினிகளை கட்டாயமாக குறிப்பிட வேண்டும்.மேலும் கொரோனா காலங்களில் இந்த பிஎஃப் தொகை மிக பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் இந்த நாமினியை நாமினேஷன் செய்வதற்கு முதலில் EBFO-வின் அதிகாரத்தளத்திற்கு செல்ல வேண்டும். அதில் சர்வீசுக்கு கீழுள்ள பார் எம்பிளாய் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இதையடுத்து அதில் உள்ள Member UAN online service (OCS/OTCP) என்பதை தேர்வு செய்ய வேண்டும்.அத்துடன் யுஏஎன் மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை உள்ளீடாக கொடுத்து லாக்-இன் செய்ய வேண்டும். இப்போது மேனேஜ் என்பதன் கீழ் தங்களின் நாமினேசன் உள்ளீடாக கொடுக்க வேண்டும். இதை தொடர்ந்து ஃபேமிலி டெக்கரேஷன் என்பதை மாற்ற விரும்பினால் அதில் உள்ள ஃபேமிலி டீடைல்ஸ் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர், family declaration என்பதை மாற்ற தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் மேற்பட்ட Add family details தேர்வு செய்து கொள்ள முடியும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.