Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு… உடனே பாருங்க…. இல்லனா உங்க பணத்துக்கு ஆபத்து….!!!!

பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் இந்த விதிமுறை அமலுக்கு வருவதால் அதற்கு முன்னதாக இந்த வேலையை கட்டாயம் செய்து முடிக்க வேண்டும். பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் ஒரு நாமினியை தங்களது கணக்கில் வைத்திருக்க வேண்டும். இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிஎஃப் உறுப்பினர் ஒருவேளை திடீரென்று உயிரிழந்து விட்டால் அவரது நாமினிக்கு தான் பிஎஃப் பலன்கள் மாற்றப்படும். நாமினியை உடனடியாக தேர்வு செய்வது உங்களுக்கு நல்லது. கால அவகாசம் முடிவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ளது.

பிஎஃப் கணக்கு மட்டுமல்லாமல், EPS கணக்கிலும் நாமினியை தேர்வு செய்வது கட்டாயம். நீங்கள் உங்களுடைய வாழ்நாள் முழுவதும் சேமித்த பணம் வீணாகி விடாமல் உங்களுக்கு விருப்பம் உள்ள நபருக்கு உங்களுக்குப் பிறகு பலன்கள் கிடைக்க இந்த வேலையை செய்யலாம். அவ்வாறு நாமினியை பதிவு செய்வது மிகவும் எளிதானது தான். இதற்கு எங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருந்து கொண்டே இந்த வேலையை முடிக்கலாம். அதற்கு epfindia.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்ற நாமினியை தேர்வு செய்யலாம். ஏற்கனவே நாமினியை தேர்வு செய்தவர்களும் அதனை மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. பிஎஃப் உறுப்பினர்கள் தங்களது UAN நம்பரை வைத்து எங்கிருந்து வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் நாமினியை தேர்வு செய்யலாம் அல்லது மாற்றலாம்.

Categories

Tech |