Categories
பல்சுவை

பிஎஃப் பணம் எடுக்க இனி எங்கேயும் அலைய வேண்டாம்…. இந்த ஆப் இருந்தா மட்டும் போதும்…. இதோ எளிய வழி….!!!!!

தனியார் துறையில் வேலை செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும் பிஎஃப் சேமிப்பு என்பது மிக முக்கியமான. ஓய்வுக்காலத்தில் இது பெரிதும் உதவியாக இருக்கும். கடைசி காலத்தில் நிதி நெருக்கடி இல்லாமல் நிம்மதியாக வாழ இந்த பணம் உதவும். அதனைப்போலவே ஏதேனும் அவசர தேவைகளிலும் பிஎஃப் பணத்தை முன்கூட்டியே எடுத்து பயன்படுத்தும் வசதியும் இதில் உள்ளது. பிஎஃப் பணத்தை எடுக்க நிறைய வழிகள் உள்ளது.

முன்பு எல்லாம் பிஎஃப் படத்தை எடுப்பதற்கு பிஎஃப் அலுவலகத்திற்கு நடக்க வேண்டிய சிரமம் இருந்தது. ஆனால் தற்போது அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே ஆன்லைன் மூலமாக எடுத்துக் கொள்ளலாம். அதற்காக உமாங் ஆப் என்ற மொபைல் செயலியைப் அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலமாக பிஎஃப் பணத்தை எவ்வாறு எடுப்பது என்பது பற்றி இதில் தெளிவாக பார்க்கலாம்.

முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் இந்த UMANG செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.

உங்களுடைய மொபைல் நம்பரை ரிஜிஸ்டர் செய்து Mpin உருவாக்க வேண்டும்.

அதன் பிறகு உங்களுடைய ஆதார் எண்ணை உமாங் ஆப்பில் இணைக்க வேண்டும்.

லாகின் செய்த பிறகு ’All Services’ பிரிவில் சென்று ‘EPFO‘ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அடுத்து  டிராப் டவுன் மெனுவில் ‘Raise Claim’ஆப்சனை தேர்ந்தெடுத்து உங்களுடைய பிஎஃப் (UAN) எண்ணைப் பதிவிட வேண்டும்.

உங்கள் மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்பப்படும். அதனை உள்ளிட்ட பிறகு உங்களுடைய கோரிக்கை பதிவாகிவிடும். இதற்கு ஒரு ரெஃபரன்ஸ் நம்பரும் வழங்கப்படும். இந்த நம்பரை வைத்து உங்களுடைய கோரிக்கை நிலையை சரிபார்க்கலாம்.

Categories

Tech |