கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிக்கும் பி.எப் பயனர்கள் இனி ரூ.1 லட்சம் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம் என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் தாக்கத்தினால் பல ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது வரை பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நோய் தொற்று காரணமாக தாக்கப்பட்டு சிகிச்சைக்காக பணம் தேவைப்படும் பிஎஃப் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த தொகையை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அளித்துள்ளது. அதாவது பயனாளர்கள் சிகிச்சைக்காக இனி ஒரு லட்சம் வரை தங்கள் பிஎஃப் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. அந்த வகையில் நிதியுதவி பெற்றுக்கொள்ள பிஎஃப் வித்டிரா விதிமுறைகள் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அதன்கீழ் வாடிக்கையாளர்கள் மருத்துவச் செலவுக்காக அதிகபட்சம் ஒரு லட்சம் வரை பணத்தை பெற்றுக்கொள்ள முடியும். மருத்துவ தேவைக்காக ஒருவர் பணம் எடுக்கும்போது அது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த சலுகை மூலம் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த சலுகை மூலம் மருத்துவ தேவைகளுக்காக பணம் எடுத்தால் அது எதிர்காலத்தில் பின்னடைவு உருவாகும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இருப்பினும் அத்தியாவசியமான மருத்துவ சேவைகளுக்காக மட்டுமே இந்த சலுகையை பயன்படுத்துமாறு அறிவுத்தப்பட்டுள்ளது.